வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வவர் ஆலயத்திற்குச் செவ்வதற்கான வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலயத்தில் இடம்பெறும் வழிபாடுகளுக்கு பக்தர்கள் சென்று வருவதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்
ஆலயத்திற்குச் செல்லும் பாதை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தமையால் நேற்று இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்விற்காக பக்தர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கிய உழவியந்திரங்கள் புதையுண்டதுடன், ஆலயத்திற்கு குடிநீர் தாங்கியை எடுத்து வந்த உழவியந்திரமும் புதையுண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து தடங்கலும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்வதற்கான வீதிச்சீரமைப்புத் தொடர்பில் எதிர்காலத்தில் தம்மால் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக ஆலயத்திற்குச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வீதியானது வனவளத் திணைக்களத்தினுடைய பகுதிகளை ஊடறுத்துச்செல்வதால் வனவளத்திணைக்களத்தின் அனுமதிகள் பெறவேண்டியிருப்பதாகவும், அதற்கமைய அனுமதிகளைப் பெற்று வீதியை சீரமைப்பதுதொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார்.