வீடுகளை வாடகைக்கு விடுவோர் பின்னணியை ஆராய வேண்டும் – பொலிஸார் எச்சரிக்கை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வீடுகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்களை வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்கள், வாடகைக்கு பெறுபவர்களின் பின்னணி குறித்து முறையாக ஆராயுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வாடகைக்கு வழங்கப்பட்ட இடங்களிலிருந்து போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பொருட்கள் அடிக்கடி மீட்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.

உரிய விசாரணையின்றி சொத்துக்களை வாடகைக்கு வழங்கும் நிலையில், அங்கு குற்றச் செயல்கள் இடம்பெற்றால் சூழ்நிலைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய சொத்து உரிமையாளர்களும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், தமது பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் காணப்பட்டால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment