வித்தியா கொலை குற்றவாளி சுவிஸ் குமார் தப்பிக்க உதவிய அதிகாரிக்கு சிறை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் வட மாகாண முன்னாள்சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனைவழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ் குமாரை தப்பிக்கஉதவிய குற்றச்சாட்டில் வடமாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் 4 வருடசிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளியான சுவிஸ்குமாரைதப்பிக்க உதவிய வழக்கு இன்று (பெப். 20) வவுனியா மேல் நீதிமன்றில்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சுவிஸ்குமாரிடம் பணம் பெற்று தப்பிக்க உதவிய குற்றச்சாட்டுநிரூபிக்கப்பட்ட நிலையில் அப்போதைய வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டதுடன், 50 ஆயிரம் ரூபா குற்றப்பணமும் அறவிடப்பட்டது.

மற்றைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் சிறிகஜனுக்கும் 4 வருடசிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறித்த நபர் நாட்டை விட்டு தப்பிச்சென்றதால் அவருக்கு திறந்த பிடியாணையும் வவுனியா மேல் நீதிமன்றத்தால்பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அரச சட்டத்தரணிநிசாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article