வவுனியா சிதம்பரபுரம் கிராம மாணவிகள் உயர்தர பரீட்சையில் சாதனை- கௌரவிப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த(உ/த) – 2023 (2024) மாணவர்களின் பெறுபேற்றில் வவுனியா சிதம்பரபுர கிராமத்தின் வரலாற்றுசாதனை பதிவு இவ் ஆண்டு பதிவாகியமையால் சாதனை படைத்த மாணவர்கள்அனைவரும் க.பொ.த சதாரண தரம் வரை  வ/ஶ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் கல்வி கற்றமையானால் அவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு நேற்று ( ஜூன்06) ஶ்ரீ நாகராஜா வித்தியாலயத் அதிபர் க.ஶ்ரீகந்தவேள் தலைமையில்நடைபெற்றது.

01. உயிரியல் பிரிவில் (merit) 3A சித்தியுடன் மாவட்ட நிலை -02 ஊடாகமருத்துவ பீடம் தெரிவுசெய்யப்பட்டுள்ள  செல்வி அ.தர்சிகா

வ/இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி

02. வணிகப்பிரிவில் 3A சித்தியுடன் மாவட்ட நிலை -16 செல்வி சி.டேன்சிகா

பெரியகோமரசன்குளம் மகா வித்தியாலயம்

03. கலைப்பிரிவில் 2A,B சித்தியுடன் மாவட்ட நிலை -65 செல்வி யோ.கிசா

வ/ஶ்ரீ நாகரஜா வித்தியாலயம்

04. கலைப்பிரிவில் A,2B சித்தியுடன் மாவட்ட நிலை 113 இனை பெற்றநா.அபிசா

வ/ஶ்ரீ நாகரஜா வித்தியாலயம்

05. கலைப்பிரிவில் B,2C சித்தியுடன் மாவட்ட நிலை 218 இனை பெற்றS.நிரோசா

வ/ஶ்ரீ நாகரஜா வித்தியாலயம்

ஆகிய மாணவிகள் பாடசாலை சமூகத்தினரால் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு பாராட்டி வாழ்த்தப்படமை குறிப்பிடத்தக்கது.

Share this Article