வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்து – ஒருவர் பலி இருவர் காயம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில்ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (ஏப்ரல்21) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருகையில்,

வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்றுமோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் மூவர் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வவுனியா மாவட்டபொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவற்றில் ஒருவர்மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தல் துரைசாமி லலிதராசா என்பவரே உயிரிழந்தவராவர். விபத்துதொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார்முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article