வவுனியாவில் டிப்பர் மோதி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, நவகம பகுதியில் இன்று (18/07) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடமைகளை முடித்துவிட்டு வவுனியா, இரட்டப்பெரியகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட், டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 46 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட்டே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்டின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலை சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share this Article
Leave a comment