வலய மட்ட கரப்பந்தாட்டத்தில் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய அணி சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வலய மட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 23 ஆம் திகதி ஊர்காவல்துறை அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் காரைநகர் வியாவில் சைவ வித்தியாலயத்துடன் மோதி வெற்றி பெற்று தொடர்ந்து இன்று (ஜூன் 26) தம்பாட்டி பாடசாலையுடன் இரண்டாவது சுற்றுப்போட்டியில் வெற்றியை பெற்று இறுதிச்சுற்று போட்டியினை காரைநகர் இந்து கல்லூரியுடன் விளையாடி சாம்பியனை தனதாக்கிக் கொண்டது.

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை பெற்று வலைய மாட்டத்தில் புதிய சாதனை ஒன்றை பாடசாலைக்கு பெற்று கொடுத்து மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

Share this Article