வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலய வைகாசிப்பொங்கல் நாளைய தினம் (ஜூன்09) மிகச் சிறப்பானமுறையில் நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன. இந்தஉட்சவ ஏற்பாடுகளானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலிலும்மாவட்டத்தின் ஏனைய துறைசார் திணைக்களங்களின் ஒத்துழைப்புடனும், பொலிஸாரின் உயர் பாதுகாப்புடனும் ஆலய நிர்வாகத்தினர் மற்றும்தொண்டர்களின் முழுமையான செயல்திறனிலும் மிகச் சிறப்பான முறையில்ஏற்பாடாகி நடைபெறவுள்ளது.

எனவே நாளைய தினம் அனைத்து பக்தர்களும் தங்கள் வழிபாடுகளை சிறப்பானமுறையில் மேற்கொள்ள முடியும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share this Article