வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கலுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உட்சவம் வருகின்ற 09.06.2025 அன்று நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (மே30)  மாவட்டஅரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலய அன்னதான மண்டபத்தில்  நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பொங்கல் உற்சவ தினத்தில் ஆலய சூழலில்மருத்துவசேவை, சுகாதார சேவை, முதலுதவி சேவை, நீர் சுகாதார சேவை, வர்த்தக நிலையங்களுக்கான உரிமம், பாதுகாப்பு, அனர்த்த முன்னாயத்த ஏற்பாடு, போக்குவரத்து சேவை, மின்சார சேவை, பொலிஸ் பாதுகாப்பு  முதலானவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், உதவி மாவட்டச் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர், சுகாதாரவைத்திய அதிகாரி, அரச மற்றும் தனியார் போக்குவரத்துக் கழகத்தினர், மின்சாரசபையினர், மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர், பாதுகாப்பு படைப்பிரிவினர், ஆலய பரிபால சபையினர் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article