வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாகபிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்விஅமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாகஅதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும்தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பானதெளிவூட்டல் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது.
பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில்இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட கல்விசார்திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள், கல்விநிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும்பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் சிலரும் கருத்துக்களைதெரிவித்து இருந்தனர்.
இக்கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் கருத்து தெரிவித்த போது,
ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட முடியாமல்இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள்ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்து அவ் வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம். விரைவில் இதற்கானதீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களைவழங்கவுள்ளோம்.
கல்வி மாணவர்களுக்கானது. அதனை நாம் சரியாக வழங்க வேண்டும். 50 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாககவனம் செலுத்தப்படும். வட மாகாணத்தில் கல்வி நிலைமைபின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். விரைவில் கல்விநிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காணஇருக்கின்றேன் எனத் தெரிவித்தார்