வசந்த கரன்னகொட, யோஷித ராஜபக்‌ஷ வழக்கு ஒத்திவைப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்‌ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு முன்னரான ஒன்றுக்கூடலுக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று (17/09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிணையில் உள்ள பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

இதன்போது நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே வழக்கு விசாரணையின் மறுதிகதி நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

Share this Article
Leave a comment