யோஷித ராஜபக்‌ஷவின் சீராய்வு மனு நிராகரிப்பு!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள “சதி” என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03/07) நிராகரித்துள்ளது.

யோஷித ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட்ட போதே, நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது

குறித்த மனு மீதான விசாரணை நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment