வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டுக் கூடமானது வடக்கின் சுயாதீனமான கலை, திரைப்படம், ஊடகம் மற்றும் நாடகக் கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் இயங்கிவருகிறது.
இதன் அடுத்த கட்டமாக எதிர்வரும் சனிக்கிழமை அகங்கனலி கூடத்தில் ஆரம்பிக்கப்படும் ‘வடக்கின் தொன்மக் குரல்’ நிகழ்வானது கலாசார பாரம்பரியத்தைப் பற்றிய முழுமையான புரிதலுடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பழங்காலக் கலைகளை வெளிப்படுத்தும் தளமாக இயங்கும்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா உட்பட முக்கிய பிரமுகர்களும் வடமாகாணத்தின் பாரம்பரிய, இளம் கலைஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் பல விருதுகளை வென்ற ஆரோகணா அரங்கக் கல்லூரியின் ‘இராவணேசன்’ நாடகமும் இன்னும் பல கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.