நெடுந்தீவுப் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்டோருக்கு நாளை மறுதினம் கண் சத்திர சிகிச்சை!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினூடாக இனங்காணப்பட்ட கண்சிகிச்சை தேவைப்படுவோருக்கான சத்திர சிகிச்சையானது எதிர்வரும் 18 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் ஜெனற் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் சிகிச்சையினூடாக பிரதேசத்தை சார்ந்த 27 நபர்கள் பயனடையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இவர்களுக்கான இலவச போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்காக நாளை காலை 08:00 மணிக்கு அம்புலன்ஸ் படகு புறப்படுவதாகவும் குறிகாட்டுவானிலும் தரைவழி அம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பயனாளிகளுக்கான அறிவித்தல் பிரதேசசெயலகம் மற்றும் வேலணை சுகாதார சேவைகள் திணைகளமூடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Share this Article