யாழ் போதனாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நெடுந்தீவு இளைஞனின் சடலம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு இன்று (ஒக்ரோபர் 31) காலை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது

நெடுந்தீவு மேற்கு பகுதியைச் சேர்ந்த குணாராசா தனுஷன் (வயது 25 ) என்பவரே இவ்வாறு மரணமானவராவார்.

திடீர் மரண விசாரணை அதிகாரி நெடுந்தீவு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகள் முடித்த பின்னரே சடலம் உறவினரகளிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டபோதும் இன்று காலை தனிபடகு மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

Share this Article