யாழ். இந்து மாணவ முதல்வர் சபையால் நெடுந்தீவில் மாணவர்களுக்கான செயற்றிட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 80 ஆவது மாணவ முதல்வர் சபையினால் bethechange எனும் செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்டமாக இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்கான செயற்றிட்டங்கள் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடாத்தப்பட்டது.

இதில் நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம், நெடுந்தீவு றோ.க மகளிர் கல்லூரி, நெடுந்தீவு மகா வித்தியாலயம் என்பவற்றின் மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.

சிறகுகள் அமையத்தை சேர்ந்த செல்வி உ.சிந்துஜா, க.இசைமதி க.பிரணவி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டதுடன் பி.கோமதன் மற்றும் மாணவ முதல்வர்களாலும் கற்பித்தல், பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பாகவும் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றது.

Share this Article