மூத்த ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் உடல் நலக்குறைவால் காலமானார்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மூத்தஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக தனது 52 வயததில்   இன்று (ஜூலை 03) காலமானார்.

கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் கடந்தகாலத்தில் பல்வேறு பத்திரிகையில் கடமையாற்றியதோடு 1999 ஆம் ஆண்டுமுதல் இறுதி யுத்தக்காலம் வரை கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில்இறுதி யுத்தச் செய்திகளை மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு போய் சேர்ததுடன்  இறுதி யுத்தக் காலத்தில் விமானக் குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்களுக்குமத்தியில் யுத்த நகர்வுகள், யுத்த இழப்புக்களை செய்திகளாக்கி மக்கள் மத்தியில்கொண்டுபோய் சேர்ப்பதில் திறமையாகச் செயற்பட்டவராவர்.

2010 ஆம் ஆண்டுமுதல் யாழ்.தினக்குரல், வலம்புரி, தினகரன், தமிழ்மிரர்உள்ளிட்ட ஊடகங்களிலும் பிரதேச செய்தியாளராக பணியாற்றினார்.

நீண்ட காலம்  சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் நடராசாகிருஸ்ணகுமார் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும் பிரதேச செய்திகளைவழங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article