முல்லை. வாள்வெட்டு தாக்குதல் நாவலி, புத்தூரில் 6 பேர் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
முல்லை. வாள்வெட்டு தாக்குதல் நாவலி, புத்தூரில் 6 பேர் கைது
சுவிஸிலிருந்து ஆவா உறுப்பினர் பணம்
முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடுபுகுந்து வாள்வெட்டில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி கள்ளப்பாட்டுப் பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்கள் இரண்டு மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this Article