முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்தஉறுப்பினரும் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளருமான சில்வேஸ்திரிஅலன்ரின் அவர்களின் பூதவுடலுக்கு இன்றையதினம் (ஜூன்29) ஈழ மக்கள்ஜனநாயக கட்சி கொடியினை போர்த்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன், தேசிய அமைப்பாளர் தோழர் பசுபதிசீவரத்தினம் , யாழ் மாவட்ட அமைப்பாளர் , மற்றும் ஊர்காவற்துறை , வேலணை, நெடுந்தீவு ஆகியவற்றின் இணைப்பாளர்களும் இணைந்து கட்சிக் கொடியினைப் போர்த்தி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.