“மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவுத் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உலகம் முழுவதும் வாழும் நெடுந்தீவின் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து தாய் மண்ணையும் உறவுகளையும் வளம்பெறச் செய்யும் நோக்குடன் நெடுந்தீவு மண்ணில் அடுத்த வருடம் 25.08.2024 தொடக்கம் 31.08.2024 வரை முற்றிலும் மாறுபட்ட அம்சங்களுடன் அனைத்து துறைசார் விடயங்களும் உள்ளடங்கியதான “நெடுந்தீவுத் திருவிழா” நிகழ்வினை நடத்துவதற்கு நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நெடுந்தீவின் உறவுகள் அபிமானிகளும், உலகின் எல்லா நாடுகளிலும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகள் அபிமானிகளும் மண்ணில் ஒன்றுகூடி மகிழ்வுடன் கூடிய கோலாகல திருவிழாவாக அந்த வாரத்தின் 7 நாட்களும் நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே உலகம் முழுவதும் வாழும் சொந்தங்கள் இந்தக் காலப்பகுதியில் குறிப்பாக எதிர்வரும் ஆண்டு ஆவணி மாதத்தின் இறுதி வாரத்தில் நெடுந்தீவுத் திருவிழாவில் கூடி மகிழ்வதற்கு ஏதுவாக தங்களது கோடைகால விடுமுறையை திட்டமிடுமாறும் எமது மண்ணின் சொந்தங்கள் அனைவரும் இந்த நிகழ்வில் ஒன்று கூடி ஊரின் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்யுமாறும் கோரியுள்ளனர்.

தொடர்புகளுக்கு:- +94 (77) 840 0534.

Share this Article