யாழ் மாவட்ட இலக்கிய விழா-2024 உதவி மாவட்ட செயலாளர் செல்விஉ.தர்சினி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (டிசம்பர்24) இடம்பெற்றது.
இதன்போது யாழ் மாவட்ட இலக்கிய விழா-2024 இனை முன்னிட்டு இடம்பெற்ற மாவட்ட மட்டத்திலான போட்டிகளில் நெடுந்தீவுப் பிரதேச செயலகப் பிரிவைச் சேரந்த மாணவர்களும் கலந்து கொண்டதுடன் இதில் நான்கு மாணவிகள் மாவட்டமட்ட போட்டிகளில் வெற்றிபெற்று சான்றிதழ்களையும் பரிசில்களையும்பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மாவட்ட மட்ட போட்டிகளில்வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் பரிசில்கள் மற்றும்சான்றிதழ்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.