மாங்குளம் பிரதேசத்தில் அமையவுள்ள விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்தொடர்பாக ஆராய்வதற்கான விசேட களவிஜயம் ஒன்றினை நேற்றைய தினம்திங்கட்கிழமை (ஜூலை 15) முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவதிலும் அமுனுகம தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர். மாங்குளத்தில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்உருவாக்கும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ள பிரதேசத்தினைபார்வையிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானங்களைமேற்கொள்ளும் நோக்கில் அமைச்சரின் கள விஜயம் அமைந்திருந்தது.
இக்கள விஜயத்தில் முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர்திரு. M. M. நயுமுதீன்,மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முதலீட்டுஊக்குவிட்டுச் சபை அதிகாரிகள், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகஉத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.