போலியான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்து விற்பனை – கணவன், மனைவி கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

போலியாக தயாரிக்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரமொன்றை வைத்திருந்த நபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, போலியான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வந்த தம்பதி நேற்று ஞாயிற்றுக்கிழமை (04/10) வெரஹெர- ஜனதா மாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை குற்ற புலனாய்வு பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது, போலி தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் 43 வயதுடையவர் என்பதோடு, ஆண் 49 வயதுடையவர் என்பதும், இவர்கள் வெரஹெர, ஜனதா மாவத்தை பகுதியைச் சேர்ந்த கணவன் – மனைவி என்பதும் தெரியவந்துள்ளது.

பொலிஸார் நடத்திய விசாரணைகளில், இவர்கள் கடந்த ஒன்றரை வருட காலமாக இவ்வாறான போலியான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து பணத்திற்கு விற்பனை செய்யும் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Article
Leave a comment