போயா நாள்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய அனுமதி?

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோச னையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார்.

போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறு இராஜாங்க அமைச்சரின் யோசனை அரசாங்க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“போயா நாட்களில் வெளிநாட்டவர்கள் மதுபானம் வாங்குவதற்கு வழி யில்லை, ” என்று அவர் குழுக் கூட்டத்தில் கூறினார். மதுபானக் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று திருமதி கமகே முன்மொழிந்தார்.



Share this Article