போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற 322 பேர் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், அப்பிரதேசத்திற்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரிவின் ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேன மற்றும் நல்லதண்ணி ஆகிய பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது 336 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் மூலம் 20 இலட்சத்து 65,000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸாரால் நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா, ஹேஷ், போதை மாத்திரைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share this Article