யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இன்று (ஜனவரி 9) பாதுகாப்புத் தரப்பினரால் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னர் பயன்படுத்தப்பட்ட வீடு அமைந்துள்ள காணியிலேயே அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் காணியில் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன என்று விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அழ்வுப் பணிக்காக நேற்று நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டிருந்தது.
இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றப் பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தா முன்னிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெர, உதவிப் பொருள் அத்தியட்சகர் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த அகழ்வுப் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.