பொருளாதாரத்தில் முன்னேற்றம்-மத்திய வங்கி மகிழ்ச்சி!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 – மே மாதத்தில் 1.6 வீதமாக அதிகரித்து, 6.873 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாத இறுதியில் 6.766 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டிருந்த கையிருப்பு, அந்த மாதத்தில் 107 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பைக் காட்டுகிறது.

அதேநேரம், சீன மக்கள் வங்கியுடனான மாற்று ஏற்பாட்டின் மூலம் கிடைத்த வருமானமும் குறித்த கையிருப்பு சொத்துக்களில் அடங்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share this Article
Leave a comment