2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வரிச் செலுத்துகை 2026 செப்டம்பர் 30 அன்று செலுத்தப்பட வேண்டும் என்பதை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு நினைவூட்டியுள்ளது.
வரி செலுத்துகைகளை மேற்கொள்ளும்போது, சரியான வரி செலுத்துவோர் அடையாள எண் ,வரி வகை, மதிப்பீட்டு ஆண்டு மற்றும் ஆவண அடையாள எண் ஆகியவை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு வரி செலுத்துவோரைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
வரிகளைச் செலுத்தத் தவறினாலோ அல்லது தாமதமாகச் செலுத்தினாலோ வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் அறிவிப்புடன் இந்த நினைவூட்டலும் வெளியிடப்பட்டுள்ளது.
தாமதமான வரிச் செலுத்துகைகள் மீது விதிக்கப்படும் வட்டி தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என்பதையும் திணைக்களம் வலியுறுத்திக் கூறியுள்ளது.
வரி செலுத்துவோர் ‘இணையவழி வரிச் செலுத்துகை தளம்’ ஊடாகக் கட்டணங்களைச் செலுத்தலாம்; அதேவேளை, இதற்கென நியமிக்கப்பட்ட வங்கிக் கிளைகளிலும் வரிப் பணம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.