பேருந்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர்திசையிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து நேற்று(செப். 18) இரவு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில்உயிரிழந்தார்.சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில்வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்தவிபத்து நிகழ்ந்துள்ளதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.

Share this Article