புனித கன்னி மரியாவின் விண்ணேற்ப்பு விழா ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புனித கன்னி மரியாவின் விண்ணேற்ப்பு விழாவின் ஆயத்த வழிபாட்டின் முதல்நாள் வழிபாடுகள் பங்குத்தந்தை ஜோண் கனீசியஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நெடுந்தீவு புனித மரியன்னை ஆலயத்தில் நேற்று(ஓகஸ்ட் 12) ஆரம்பமானது.

முதல்நாள் திருப்பலியை கிளரீசியன் துறவறசபையின் அருட்பணியாளரும் பதுளை மறைமாவட்டத்தில் பணியாற்றுபவருமாகிய றொபேட் ஜேக்கப் அடிகளார் ஒப்புக்கொடுத்து செபித்தார்.

இன்றைய நாள் (ஞாயிறு 13) வழிபாடுகள் மாலை 05:00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி 05:30 மணிக்கு திருப்பலியும் இடம்பெற்றது.
புனித கன்னி மரியாவின் விண்ணேற்ப்பு விழாவின் ஆயத்த வழிபாட்டின் இரண்டாம் நாள் திருப்பலியை அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார் ஒப்புக்கொடுத்து செபித்தார்.

நாளை 14 ஆம் திகதி (திங்கள்) நற்கருணை பெருவிழாவானது மாலை 04:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி 05:00 மணிக்கு திருப்பலியும் இடம்பெறவுள்ளது.

Share this Article