புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய கடற்கரைப் பகுதி இன்று சிரமதானம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணை பிரதேச செயலக பிரிவில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகமும் இணைந்துநடாத்திய கடற்கரை சுத்திகரிப்பு இன்றைய தினம் (செப். 13) நடைபெற்றது.

வேலணை பிரதேச செயலக பிரிவின் J/25, J/26 ஆகிய கிராம சேவகர்பிரிவுகளில் புங்குடுதீவு கண்ணகி அம்மன் பின்புற கடற்கரைப் பகுதியே இவ்வாறு இன்றையதினம் சுத்தம் செய்யப்பட்டது.

இந் நிகழ்ச்சிதிட்டத்தில் மாவட்ட செயலக சுற்றுச் சூழல் உத்தியோகத்தர்கள், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், கிராமஉத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்திஉத்தியோகத்தரகள், பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள், மற்றும் சுற்றுச்சூழல் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article