யாழ் புங்குடுதீவு பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ் புங்குடுதீவு பகுதியில் பற்றைக் காட்டுக்குள் வெடி பொருட்கள் காணப்படுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அவை இன்று நண்பகல் அளவில் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு சென்ற இராணுவத்தினரால் பிளாஸ்ரிக் பை ஒன்றில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட் பொதி மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொதியில் நான்கு டைனமற் வெடித் தொகுதி கல்லுடன் இணைத்து கட்டப்பட்டு காணப்பட்டதுடன் ரிக்னேட்டர் இரண்டும் இருந்துள்ளதாக இராணுவத் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சதிச் செயற்பாடுகளில் பயன்படுத்துவதற்காக தயார் செய்து மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த வெடிபொருட்கள் ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த வெடி பொருள் மீட்பு தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணகைளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.