தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு, வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனித்தே ஆட்சியமைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதை மக்கள்விரும்பவில்லை என்பதால் நாம் தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளைமேற்கொள்வோம் என, மேற்குறித்த மூன்று சபைகளுக்கும்தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தீவகத்தின் உள்ளூராட்சி மன்றஉறுப்பினர்களும், கட்சியின் தீவகத் தொகுதிக் கிளை உறுப்பினர்களும், தொகுதிக் கிளைத் தலைவர் மா.இளம்பிறையன் தலைமையில், நாடாளுமன்றஉறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமானசிவஞானம் சிறீதரன் அவர்களை நேற்றையதினம்(ஜூன் 15) அவரது இல்லத்தில்சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

Share this Article