புங்குடுதீவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு தீவைப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புங்குடுதீவு வல்லன்  நாவில் குளத்தினை அண்டிய  பற்றைக்காடுகள் நிறைந்தபகுதியில்  இயங்கிவந்த  கசிப்பு உற்பத்தி நிலையமொன்று  நேற்றுமுன்தினம்புங்குடுதீவு மடத்துவெளி பிரதேச கிராமசேவகர் மற்றும் தீவகம் சிவில் சமூகம்அமைப்பின் உறுப்பினர்களால் முற்றுகையிடப்பட்டு முற்றாக தீமூட்டி எரித்துஅழிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதகாலமாக  புங்குடுதீவு பிரதேசத்தில்  கசிப்பு உற்பத்திமேற்கொள்ளப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும்  இதன் காரணமாக கிராமத்தில்சமூக சீர்கேடுகள், வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள்தெரிவித்ததினை தொடர்ந்தே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு  கிராமசேவகர் மற்றும் தீவகம் சிவில்சமூகம் அமைப்பின் உறுப்பினர்களுடன்  புங்குடுதீவு கடற்படை முகாம் கடற்படையினரும் இணைந்து கசிப்பு தயாரிக்கப்படுகின்ற பகுதியைசுற்றிவளைத்து உற்பத்தியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நோக்கில்நடவடிக்கை இருந்தபோதும் எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரியவருகின்றது.

இதேவேளை கசிப்பு  உற்பத்தி நிலையம் தீயிட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article