நல்லூர்; சுகாதார அதிகாரி பிரிவிற்குட்பட்ட திருநல்வேலி மத்தி வடக்கு பாற்பண்ணை கிராம சேவையாளர் பிரிவு முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இக் கிராமத்தில் 51 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
திருநெல்வேலி சந்தi கட்டிடத்தொகுதியுடன் தொடர்புடைய 127 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டிருந்தனர் இதில் 51 பேர் மேற்படி கிராமத்தினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பாற்பண்ணை கிராமத்திற்கான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டு இராவணுத்தினர் மற்றும் பொலிசார் கடமைக்கு அமாத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் முற்பகல் யாழ்மாவட்ட செயலாளர் தலமையில் இடம் பெறும் கலந்துரையாடலின் பின்னரே சுகாதார பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.