நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் வருடாந்த “செயற்பட்டு மகிழ்வோம் – 2025” நிகழ்வு நாளை (மார்ச் 11, செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
வித்தியாலய முதல்வர் ப. பத்மகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற அதிபர் லோ. நகுலசிறி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், சிறப்பு விருந்தினர்களாக இந்துமத குரு பிரம்மஶ்ரீ பிரதீபசர்மா மற்றும் நெடுந்தீவு பிரதம தபாலக தபாலதிபர் கோ. யோகேஸ்வரன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.