நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையில் பாதுகாப்புக் கமரா கண்காணிப்பு நடவடிக்கை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையில் பாதுகாப்புக் கமரா பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் நெடுந்தீவில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நெடுந்தீவுக்குள் நுழைவோரையும், வெளியேறுவோரையும் கண்காணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் கமரா கண்காணிப்பு நடவடிக்கைகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.

கண்காணிப்புக் கமராக்களை நெடுந்தீவைச் சேர்ந்த அமரர் Dr.மருது கந்தப்பு அவர்களின் 81ஆவது பிறந்ததின நினைவாக அவரது குடும்பத்தினர் பொருத்தித்திக் கையளித்துள்ளனர்.

Share this Article