நெடுந்தீவு மாணவர்களுக்கு சமுர்த்தி வங்கி சேமிப்புக் கணக்குகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இவ் ஆண்டில் (2023 ) தரம் ஒன்றுக்கு உள்வாங்கப்பட்ட 44 மணவர்களுக்கு இன்று சமுர்த்தி வங்கி சேமிப்புப் புத்தகங்கள் வைபவரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் “நல்லிணக்கத்திற்கான எதிர்கால தலைவர்கள்” எனும் கருப்பொருளிற்கு அமைவாக கலைநிகழ்வுகளுடன் கூடிய பரிசளிப்பு விழா இன்று பிரதேசசெயலக மண்டபத்தில் பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது வழங்கிவைக்கப்பட்டது.

புலம்பெயர்ந்து வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரால் எமது ஊடகத்தின் ஊடாக, இவ்வருடம் தரம் 01 இற்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தினை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாணவருக்கும், நெடுந்தீவு சமுர்த்தி வங்கி மூலம் சேமிப்பு கணக்கினை ரூ. 1000.00 வீதம் வைப்பு செய்து திறக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.

நிகழ்வுக்கு சமூகமளிக்காத மாணவர்களது வங்கிப் புத்தகங்கள் உரிய பாடசாலைகள் ஊடாக மாணவர்களுக்கு கையளிக்க ஏற்பாடாகியுள்ளது.

இச் செயற்பாடானது கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share this Article