நெடுந்தீவு மாணவர்களுக்கான இரண்டுநாள் யோகா பயிற்சி நிறைவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஏற்பாட்டில் சுனந்த தேரோ அவர்களின் ஆதரவுடன் மாணவர்களுக்கான இரண்டுநாள் யோகா பயிற்சியானது நேற்றுடன் (ஏப்ரல் 30) நிறைவுற்றது.

தூய யுவானியார் ஆலய முன்றலில் இடம்பெற்ற பயிற்சியில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நலன்விரும்பியான யோகா போதனாசிரியர் விக்ரோறியா கலந்துகொண்டு இப்பயிற்சிகளை மாணவர்காளுக்கு வழங்கினார்.

இந்தப் பயிற்சிகளானது இரண்டு தினங்கள் (ஏப்ரல் 29,ஏப்ரல் 30) இடம்பெற்றதுடன் இப்பயிற்சியில் 300 இற்கு மேற்பட்ட
மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்துகொண்டனர்.

Share this Article