நெடுந்தீவு மத்தி முன்பள்ளி மாணவர்களின் சந்தை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தென்னிந்திய திருச்சபையின் நெடுந்தீவு மத்தி முன்பள்ளியின் மாணவர் சந்தை நிகழ்வு இன்றைய தினம் (மே 26) இடம்பெற்றது.

பாடசாலை வளாகத்தில் சிறப்புற ஒழுங்குசெய்யப்பட்ட இந்த சந்தை நிகழ்வில் பிரதாம அதிதியாக நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் நிஷாந்தினி கலந்துகொண்டு மாணவர் சந்தையை ஆரம்பித்துவைத்தார்.

நிகழ்வில் சிறப்பு அதிதியாக நெடுந்தீவு முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி.வசந்தசகாயராணி கலந்துகொண்டார்.

உள்ளூரில் உற்பத்தி மற்றும் தயாரிக்கப்படுகின்ற பனம் உற்பத்தி பொருட்கள், மரக்கறி வகைகள், கடல்சார் உற்பத்திகள் மற்றும் உணவுத் தயாரிப்புக்களை சிறார்கள் சந்தைப்படுத்தினர்.

இந்த சந்தை நிகழ்வில் முன்பள்ளிகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பயன்பெறுநர்களாகிய நலன்விரும்பிகளும் கலந்துகொண்டனர்.

Share this Article