நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா-2023 நேற்று(ஒக்ரோபர் 6) காலை உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது.

ஆசிரியர்களின் ஆசி வேண்டி நேற்று மகா வித்தியாலய வளாகத்தில் அமைத்துள்ள லூர்த்து அன்னை ஆலய வளாகத்தில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

ஆசிரியர்கள் வைபவரீதியாக மாணவிகளின் நாடன வரவேற்புடன் மாணவர்களால் விழா மண்டபத்திற்கு மலர் செண்டுகள் வழங்கி அழைத்துச் செல்லப்பட்டதுடன் , ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் நினைவுக்கேடயங்களை பழைய மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் மாணவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. நேற்றைய நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article