நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தினநிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

“எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” என்னும் தொனிப்பொருளின் கீழ் இன்று(ஒக்ரோபர் 2) நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தினரால் சிறுவர் தினநிகழ்வுகள் நெடுந்தீவு மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவிலுள்ள பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு மற்றும் உயர்தரப் பிரிவு மாணவர்களிடையே போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றிபெற்றோருக்கு சிறப்பு பரிசில்களும் வழங்கப்பட்டன.

போட்டி நிகழ்வுகளில் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். வளமான எதிர்கால சந்ததியினை கட்டியெழுப்புவதே இந்த நிகழ்வுகளின் பிரதான நோக்கமாகும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article