நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கலைநிகழ்வும் பரிசளிப்பும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் “நல்லிணக்கத்திற்கான எதிர்கால தலைவர்கள்” எனும் கருப்பொருளிற்கு அமைவாக கலைநிகழ்வுகளுடன் பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை(ஓகஸ்ட் 23) இடம்பெற்றது.

பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் தேசிய மொழிகள் சமய ஒருமைப்பாடு பிரிவின் பொறுப்பதிகாரி ந.உமாநாத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், நெடுந்தீவு பிரதேச பாடசாலை அதிபர்கள் , மதகுருமார் , பொது அமைப்பு பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Share this Article