நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழா-2023 இன் பரிசளிப்பு நிகழ்வு நேற்று(நவம்பர் 8) நெடுந்தீவு மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இளைஞர் சம்மேளன தலைவர் வ.ரஜீவ்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உதவி பொலிஸ் பரிசோதகர் N.S.பண்டார, நெடுந்தீவு மகா வித்தியாலய அதிபர் ஏ.சச்சிதானந்தம் அவர்களும் கெளரவ விருந்தினராக நெடுந்தீவு விளையாட்டு உத்தியோகத்தர் சி.வல்லவக்குமரன், நெடுந்தீவு பல. நோ. கூ. சங்க தலைவர் எட்வேட் அருந்தவசீலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் சிறப்பு போட்டியாக பாடசாலை அணியினருக்கும் நெடுந்தீவு இளைஞர் கழக வீரர்களுக்கும் இடையில் நட்பு ரீதியிலான உதைபந்தட்ட போட்டி நடைபெற்றது. இதில் பாடசாலை அணி 2:3 கோல்களைப் பெற்று வெற்றியீட்டியது.
2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற இளைஞர் விளையாட்டு போட்டிகளில், மொத்த புள்ளிகளின் அடிப்படையில் நெடுந்தீவு தெற்கு விங்ஸ் இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தினையும் , நெடுந்தீவு சென் அன்ரனிஸ் இளைஞர் கழக அணி முதலிடத்தையும் பெற்று 2023 சம்பியனானமை குறிப்பித்தக்கது.
இளைஞர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசில்களை விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.