நெடுந்தீவு தூய யூதாததேயு ஆலய திருவிழா திருப்பலி இன்று காலை (மார்ச் 25) 06:45 மணிக்கு ஆரம்பமாகியதுடன் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றது.
முதல் நாள் வழிபாடுகள் கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
புனித ஜோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வீதியோர சிலுவைப் பாதை தியானமானது வெல்லை பிரதேசத்தில் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாம் நாள் வழிபாடுகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலியும் தொடர்ந்து நற்கருணை வழிபாடு மற்றும் ஆசீரும் இடம்பெற்றது.
திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் நலன்கருதி விசேட பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.