நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலய கொடியேற்றம் இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருநாளின் இன்று மாலை(மே 1) 05:00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் நான்காம் திகதி ஆரம்பமாகின்ற நவநாள் வழிபாடுகள் மாலை 05:00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருப்பலியும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 07ஆம் திகதி இடம்பெறவுள்ள ஞாயிறு காலை திருப்பலியில் முதல்நன்மை அருட்சாதனம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி நற்கருணை விழாவும் 13 ஆம் திகதி காலையில் திருவிழா திருப்பலியும் இடம்பெறவுள்ளது.

Share this Article