நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தின் தூய பற்றிமா அன்னை மற்றும் குழந்தை இயேசு ஆகிய திருச்சுரூபங்களை தாங்கும் கூடுகளானது நேற்றுமுன்தினம்(மே 5) புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளாரின் நெறிப்படுத்தலுக்கு அமைவாக இந்தத் திருச்சுரூபங்கள் ஆலயத்தில் நிறுவப்பட்டன.
இக் கூடுகளை நெடுந்தீவைச் சேர்ந்த இ.அன்ரனி மதுரநாயகம், ம.வேதநாயகம் ஆகியோரின் குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கியிருந்தனர்.
இதேவேளை தூய பற்றிமா அன்னையின் திருச்சுரூபம் ஒன்றை போர்த்துக்கல் பற்றிமா ஆலயத்தில் இருந்து கொண்டுவந்து அன்பளிப்பாக லூட்ஸ் மேறா குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.