நெடுந்தீவு கொலை இடம்பெற்ற வீடு உறவினர்களிடம் இன்று கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறைமுகப் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி கொலை நடைபெற்ற வீடு உறவினர்களிடம் முழுமையாக  இன்று(ஏப்ரல் 29) கையளிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளரான காத்திகேசு நாகசுந்தரி உட்பட ஐந்துபேர் பேர் படுகொலை செய்யப்பட்டனர். 100 வயதுடைய மூதாட்டி ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த நிலையில் படுகொலை இடம்பெற்ற வீடு தடயவியல் பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் நெடுந்தீவு பொலிஸாரால் இன்றைய தினம் முழுமையாக வீட்டு உரிமையாளரின் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

Share this Article