நெடுந்தீவு கொலைச் சந்தேகநபருக்கு மேலும் விளக்கமறியல் நீடிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவில் 6 பேர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் இன்று(ஜூலை 18) உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று சந்தேக நபர் முற்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

படுகொலை செய்யப்பட்டவர்களின், நெடுந்தீவிலுள்ள நெருங்கிய உறவினர்கள் இருவருக்கு கடந்த தவணைக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டபோதும் அவர்கள் நீதிமன்றில் பிரசன்னமாகவில்லை.

இந்த முறை ஒருவர் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதுடன் மற்றையவர் இன்றும் மன்றுக்கு வரவில்லை என தெரியவருகின்றது.

Share this Article