நெடுந்தீவு குறிகட்டுவான் போக்குவரத்துச் சேவையில் மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் நெடுந்தீவில் இருந்து குறைக்கட்டுவான் நோக்கிச் சென்ற வடதாரகை படகு கடும் காற்றுக் காரணமாக தரைதட்டி பெரும் அசௌகரியங்களுக்குள்ளானது.

இதன் காரணமாக நெடுந்தீவிலிருந்து காலை வேளையிலே குறிகாட்டுவான் சென்று அங்கிருந்து திரும்பும் பயணிகள் சேவைக்காக நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் சமுத்திரதேவா படகு சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன் மாலை நேர சேவையில் வடதாரகை படகு ஈடுபடுத்தப்படவுள்ளது.

தற்போதைய காலநிலை சீரற்ற நிலை மற்றும் கடல் வற்றுக் காலங்கள் முடிவுக்கு வரும் வரைக்கும் இந்த நடைமுறை இருக்கும் என தெரியவருகின்றது.

Share this Article